● பெயர் இல்லாத நபர்.

எனது அண்ணன் மகளுக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும்? அவள் பெயரிலுள்ள காலிலிமனையை எப்போது விற்கலாம்? வீடு உள்ளது. நிலைத்து நிற்குமா?

Advertisment

ரகசியமாக இல்லாமல் ஊர், பெயர் எல்லாம் எழுதி கேள்வி கேட்டால்தான் பதில் சொல்லமுடியும்.

● ஜெயஸ்ரீ, சென்னை- 42.

எனக்காகவே வாழும் என் அக்காவுக்கு, லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய கண் நோய் (Antigon Grve Eye Disease) வந்திருக்கிறது. 1-1-2018 முதல் தைராய்டுக்கு சிகிச்சை (ஒருவருடம்) தொடர்ந்து எடுத்தும் குணமாகாமல், ரேடியேஷன் (கதிர்வீச்சு) ட்ரீட்மென்ட் செய்தபிறகு விழிகளை மூடமுடிகிறது. நம் உடலிலிலுள்ள நன்மை செய்யும் செல்லே தீமை செய்யும் செல்லாக மாறி, முதலில் கண்ணையும், பிறகு மூளையையும், மூன்றாவதாக இதயத்தையும் பாதிக்குமாம். நல்ல வேளையாக மூளையைப் பாதிக்கவில்லை. இப்படி கதிர் வீச்சு சிகிச்சை செய்வதால் பிற்காலம் பக்கவிளைவுகள் உண்டாகுமா? அக்கா மகள் திருமணம் முறிந்த நிலையில், தங்கள் ஆலோசனைப்படி பள்ளத்தூரில் 18 விதமான ஹோமங்கள் செய்தோம். மறு மணம் எப்போது நடக்கும்?

அக்கா கமலவேணிக்கு 59 வயது. அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். புதன் தசை, கேது புக்தி. லக்னத்தில் சனி. 7-ல் செவ்வாய், புதன் 2-ல். செவ்வாயின் பார்வை. அக்காவுக்கும் அவர் கணவருக்கும் கண் சம்பந்தமான பீடைகள் இருக்கும். அக்கா ஜாதகத்தில் 9-ல் சிம்மத்தில் ராகு. அவர் கணவர் அண்ணாதுரை ஜாதகத்தில் விருச்சிக லக்னத்தில் ராகு. அவருக்கு சிம்மச் செவ்வாய் பார்வை. இருவருடைய ஜாதகப்படியும் குலதெய்வக் குறையோ அல்லது முன்னோர்கள் வகையில் சாபதோஷமோ இருப்பதாகத் தெரிகிறது. அதை நல்ல கேரள ஜோதிடரிடம் பிரசன்னம் பார்த்து நிவர்த்தி தேடவும். மகள் மாதவி இந்துவுக்கு 2020 தைமுதல் திருமண யோகம். அதாவது 29 வயது முடிந்து 30-ல் நடைபெறும். (ஏற்கெனவே ஹோமம் செய்ததால் 30-ல் திருமணம் கூடும்). வேறு பரிகாரம் தேவையில்லை. ஈரோடு சீதாராம் சாமி அவர்கள் ஓராண்டுக்குமுன்பு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதனால் சந்திக்க அனுமதி இல்லை. இப்போது திடமாக- நலமாக உள்ளார். மீண்டும் அவர்களைச் சந்தித்து ஆசிபெறலாம். (சனிக் கிழமை மட்டும் மௌன விரதம் இருப்பதால் வேண்டாம்).

Advertisment

as

● த. கார்த்திகா, சென்னிமலை.

எனது பெரியம்மாவின் மகனுக்கு 26 வயது. எப்பொழுது திருமணம் நடை பெறும்? வேலை வாய்ப்பும் சரியில்லை.

சுந்தர் மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம், கன்னியா லக்னம். லக்னாதிபதி புதனும் சந்திரனும் பரிவர்த்தனை. லக்னத்தில் குரு நின்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும், ராசியைப் பார்ப்பதும் சிறப்பு! ஆனால் அட்டமாதிபதி செவ்வாயும் கன்னியில் இருப்பது தோஷம். 27 வயது முடிந்தபிறகு 28-க்குமேல் திருமணம் செய்வது நல்லது. 30 வயதில் சுக்கிர தசை வந்தபின் தொழில், வருமானம் திருப்தியாக அமையும். இப்போது கேது தசை சுமார்தான்! ஒருமுறை பிள்ளையார்பட்டிக்குப்போய் கற்பக விநாயகருக்கு அபிஷேகப்பூஜை செய்யவும்.

● ஜி. முத்தராஸ், மதுரா.

Advertisment

எங்கள் மூத்தபிள்ளையின் தொழில், சிறிய பிள்ளை யின் அரசு உத்தியோகம், பெண் குழந்தையின் ஆரோக் கியம் எப்படியிருக்கும்?

இவர்களுக்கெல்லாம் பெயர் வைக்கவில்லையா? பொதுப் படையாக- அரைகுறையாக எழுதியுள்ளீர்கள். எந்தக் கேள்வியையும் விவரமாக- தெளிவாக எழுதிக்கேட்க வேண்டும். காசோலையில் தொகை, பெயர் எல்லாம் எழுதிவிட்டு, கையெழுத்துப் போடாமல்விட்டால் "செக்' செல்லுமா? மறுபடியும் விவரமாக எழுதுங்கள். மூத்த பிள்ளை, இளைய பிள்ளை என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியுமா?

● டி. கௌசல்யா, வீராச்சி பாளையம்.

நான் பிசியோதெரபி முடித்துள்ளேன். எனக்குத் திருமணம் எப்போது நடைபெறும்? நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்கிறார்கள். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? வெள்ளியங்கிரிக்கு மாலை போடும்போது என் தந்தைக்கு ஏதாவது தடங்கல் அல்லது இறந்த செய்தி வருகிறது. சமயபுரம் மாரி யம்மனுக்கு தேங்காய் உடைத்தபோது அழுகிவிட்டது. என் அத்தை மகன் மூல நட்சத்திரம். எனக்கு அவனைத் திருமணம் செய்து வைக்கப் பார்க் கிறார்கள். அத்தை மகனை எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு அரசு வேலை கிடைக் குமா?

ரிஷப லக்னம், ரிஷப ராசிக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. இது ஆகாத காலம் மட்டுமல்ல; போதாத காலம். (Bad Time). அத்துடன் ராகு தசையும் நடக்கிறது. 19 வயதுமுதல் ராகு தசை 18 வருடம்- 37 வயதுவரை. இப்போது 28 வயதுதான் நடக்கிறது. 30 வயதுவரை திருமணம் பற்றி சிந்திக்க வேண்டாம். நாகதோஷம் உண்டு. உங்கள் அம்மாவிடம் சொல்லிலி திருமணத்தைத் தள்ளி வைக்கவும். நீங்கள் ரிஷப ராசி. அத்தை மகன் மூல நட்சத்திரம், தனுசு ராசி. 6ஷ்8 சஷ்டாஷ்டக ராசி. எந்த வகையிலும் பொருந்தாது. உங்கள் தாய்- தந்தையரிடம் சொல்லிலி இந்தப் பொருத்தம் சரிவராது என்று கேன்சல் செய்யவும். இந்த பதிலை அவர்களிடம் படித்துக் காட்டவும். 30 வயது ஆரம் பிக்கும்போது ஒரு பரிகாரம் செய்யவேண்டும். 2020 ஆடியில். அதற்கு செலவாகும். ஹோமம் செய்யவேண்டும். பணம் சேர்த்துவிட்டு கேட்கவும்.

● ராமசாமி, திண்டுக்கல்.

என் மகளுக்கு 25 வயது நடக்கிறது. திருமணத்துக்கான எல்லா முயற்சிகளும் செய்தும் திருமணம் கைகூடவில்லை. எப்போது திருமணம் நடக்கும்?

உங்கள் மகள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷமும் நாகதோஷமும் இருப்பதால் திருமணம் தடைப்படுகிறது. நாகதோஷ நிவர்த்திக்கு திருநாகேஸ்வரம் அல்லது தேனி வழி உத்தமபாளையம் சென்று ராகு கால பூஜையில் கலந்துகொள்ளலாம். வசதியிருந் தால் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்யலாம். 26 வயது முடிந்து 27 வயதில் திருமணம் நடக்கும்.

● ஈஸ்வரி, காரைக்குடி.

கணவர் இல்லை- குழந்தையும் இல்லை. எதிர்காலம் எப்படியிருக்கும்?

உங்கள் ஜாதக அமைப்பின்படி உங்களுக்கு அம்மன் அருள் உண்டு. அதனால் சாமி வரும். அருள்வாக்கு கூறலாம். உங்கள் முயற்சியால் ஒரு அம்மன் கோவில் கட்டுகிற யோகம் உண்டு. அந்தக் கோவில் அருகிலேயே நீங்களும் ஒரு வீடு கட்டிக் குடியிருந்துகொண்டு கோவிலையும் பராமரிக்கலாம். அங்கேயே அருள்வாக்கு- குறி சொல்லலாம். அடுத்து ராகு தசை வரப்போகிறது. அப்போது உங்கள் பேரும் புகழும் பரவும். வெளியூர்களிலிருந்து உங்களைத் தேடிவருவார்கள். காளியை உபாசிக்கலாம்.

● ஜீவா, திண்டிவனம்.

நான் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னை ஒருவர் விரும்பு கிறார். என்னைவிட அவர் படிப்பிலும், வருமானத்திலும் குறைந்தவர். அவரைத் திருமணம் செய்யலாமா? கடைசிவரை துணையாக இருப்பாரா?

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்- சனி சம்பந்தம் இருப்பதால், காதல் திருமணம், கலப்புத் திருமணம்தான் நடக்கும். உங்களை விரும்புகிறவருக்கு என்ன நட்சத்திரம், என்ன ராசி என்று கேளுங்கள். உங்களுக்கு 6-ஆவது ராசி அல்லது 8-ஆவது ராசியாக இருந்தால், அவரை ஒதுக்கிவிடுங்கள். (சஷ்டாஷ்டக ராசி சேராது). அத்துடன் உங்களுக்கு மனப் பொருத்தமும் இருக்கவேண்டும். அவருக்கு ஜாதகம், நட்சத்திரம், ராசி தெரியவில்லை என்றால் தெய்வ சந்நிதியில் சீட்டு எழுதிப் போட்டு உத்தரவு கேளுங்கள். என்ன உத்தரவு வருகிறதோ அதன்படி நடக்கலாம்.